பதிவு:2026-03-05 15:55:14
வேடங்கிநல்லூர் பகுதியில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க. பேருந்து நிலையத்தில் மின்னனுத் திரையில் பேருந்து சேவை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் :
திருவள்ளூர் மார்ச் 05 : தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப் பணிகளையும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இக்காணொளியை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், வேடங்கிநல்லூர் பகுதியில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திரு.வி.க. பேருந்து நிலையத்தில் மின்னனுத் திரையில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பேருந்து சேவைகளை தொடங்கி வைத்து, பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட ஜே.என். சாலை பகுதியில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஸ்மார்ட் வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பின்புற பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை கிழக்கு) அலுவலக கட்டுமான பணிகளுக்கும், பல்நோக்கு கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்பு அறை கட்டட கட்டுமானப் பணிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அடிக்கல் வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் எஸ்.தணிகாச்சலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை மத்திய) கே.எஸ்.யுவராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை கிழக்கு) பஞ்சு, உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தாமேதரன், போக்குவரத்து துறை (திருவள்ளூர்) பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அமுதா, பள்ளி தலைமையாசிரியர் முரளிதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.